12 ஏப்., 2011

தேர்தல் - 2011 - இறுதி அலசல், யாருக்கு வெற்றி...


இந்தத் தேர்தல் நிச்சயமாக நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை தந்திருக்கிறது. காலம் காலமாக காது கிழிய வைக்கும் பிரசாரங்களும், சுவர்களை சுண்ணாம்பால் நாறடிக்கும் விளம்பரங்களும் பார்த்த நமக்கு இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

இணையத்தில், களத்தில் தமிழ் உணர்வாளர்கள் காங்கிரஸ் எதிர்ப்பை மிகத்தீவிரமாக கையாண்டபோது காங்கிரசாரே அதனை எதிர்க்காத நிலையில் சில தி.மு.க உடன்பிறப்புகள் மட்டமாக நடந்துகொண்டனர். தலைவர்தான் சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார் என்றால் தொண்டர்களுமா? என வருத்தமாக இருக்கிறது.  அண்ணாவால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் உணர்ச்சி மிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. ஆனால் கருணாநிதியின் சுயநலத்தால் எம்.ஜி.ஆர், வைகோ பிரிவு ௦௦முதல் தா.கி கொலை வரை போய் இப்போது ஒட்டுமொத்த கழகமும் ஒரு குடும்பத்தின் கரங்களில். இதனை கண் மூடித்தனமாக ஆதரிப்பவர்களின் அறிவாற்றலை எண்ணி வருத்தப்படத்தான் வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு குறைவானவர் இல்லை. கடந்த ஐந்தாண்டில் மக்கள் நலனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர். மேலும் மொத்த கழகமும் சசிகலாவின் கையில். அங்கு மேல்மட்ட தலைவர்கள் வரைக்குமே மரியாதை கிடையாது. இப்படிப்பட்டவர்தான் தி.மு.க வுக்கு மாற்றாக நம் கண்முன் இருக்கிறாரர். இவர் வந்து என்ன செய்துவிடப்போகிறார் என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி. ஆனால் ஆட்சியை மாற்றி கொடுத்தால்தான் ஆள்வோருக்கு கேரளா மாதிரி ஓரளவுக்காவது பயம் இருக்கும். இந்தமுறை ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. அதனை அவர் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

விஜயகாந்த் என்கிற ஒரு ஹீரோ இந்த தேர்தலில் காமெடியனாகிப்போனார். காமெடியன் வடிவேலு ஹீரோவாகிப்போனார். உண்மையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம் மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கினை காட்டியது. கொஞ்சம் அருவருப்பாக பேசினாலும் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வடிவேலு சலிக்காமல் பிரச்சாரம் செய்தது அவர் இந்த அளவுக்கு வளர எடுத்துக்கொண்ட உழைப்பை பார்க்க முடிந்தது.  ஒரு எளிய மனிதராக சினிமாவுக்குள் நுழைந்து தமிழ்நாட்டு அரசியல்வரை முன்னேறியிருக்கும் வடிவேலுக்கு எனது பாராட்டும்,வாழ்த்தும்.. விஜயகாந்த்துக்கு இனி அரசியல் எதிர்காலம் இருக்காது.  

தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணம் பெரும்பான்மையானவை பொது மக்களின் பணம். ஆனால் எல்லா ஊர்களிலும் தி.மு.க கூட்டணியினர் நூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய் வரைக்கும் தங்கள் கட்சிக்காரர்களின் ஒட்டு மாறிவிடக்கூடாது என கொடுத்து உள்ளார்கள். திருவாரூரில்(கலைஞர் தொகுதி) ஐநூறு ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தீவிர கெடுபிடி கருணாநிதியை கோபப்பட வைத்திருக்கிறது. அவருக்குதான் நேர்மையாய் இருப்பது பிடிக்காதே.

முக்கியமாக ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் பிடியில் இருப்பதால் வெறுத்துப்போகும் அளவுக்கு தேர்தல் பிரசாரங்களை செய்தாலும். நாம் அனைவருக்கும் நன்றாக பொழுது போனது. அனைத்து அரசியல்வாதிகளுமே எவ்வளவு கேவலமான உத்திகளையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள் . எனப்பார்க்கும்போது மிக வேதனையாக இருந்தாலும் இனி இவர்களின் பருப்பு வேகாது என்பது மக்களின்  பேச்சில் இருந்து தெரிகிறது.

மாற்றி மாற்றி இரண்டு கழகங்களும் இலவசங்களை வாரி வழங்குவதாக அறிவித்து இருப்பதும், கடைசி மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை விட்டு காங்கிரஸ் தன் இருப்பை காட்டிக்கொண்டதும். சோனியா ஈழ மக்களை காப்பாற்றுவேன் எனப்பேசியதும். தி.மு.க காங்கிரசுக்கு 63 கொடுத்துவிட்டு, கோ.மு.ச வுக்கு ஏழு கொடுத்துவிட்டு தன் ஐந்தாண்டு சாதனைகளை பெருமையாக சொல்லி ஒட்டுகேட்பதும் மிகப்பெரிய நகைச்சுவை.

இந்த தேர்தலில் நடந்த காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்கு சீமானுக்காக கூடிய கூட்டம். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை காட்டுகிறது. வைகோ, விஜயகாந்த் தவற விட்ட மாற்று சக்தியாக அவர் இருப்பார். இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டில் சீமான் தன் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெல்லட்டும்...

இறுதியாக எனது கணிப்பு:
அ.தி.மு.க கூட்டணி:136                             தி.மு.க கூட்டணி: 87
அ.தி.மு.க -  105                                                     தி.மு.க - 60
தே.மு.தி.க - 17                                                      காங்கிரஸ் - 12
இந்திய கம்யூனிஸ்ட்-  7                                      பா.ம.க - 12
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -  5                            வி.சி.க - 2
ம.ம.க -   2                                                               கொ.மு.ச - 1

                                    இழுபறி :  11  

இந்த இழுபறி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தனி மனித செல்வாக்குள்ள காங்கிரஸ் வேட்பாளர்களால் அவர்களுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பை பொறுத்தது.

எதுவாக இருந்தாலும் மே 13 ஆம் தேதி காலை பதினோரு மணிக்கு தெரிந்துவிடும். தொடர்ந்து தேர்தல் பற்றிய பதிவுகளை போட்டதால் ஆயாசமாக இருக்கிறது. இனி வழக்கமான பதிவுகளை எழுதுவேன்.

76 கருத்துகள்:

Chitra சொன்னது…

இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.


...Super! அதுதான் முக்கிய செய்தி...

புதுகை.அப்துல்லா சொன்னது…

// இறுதியாக எனது கணிப்பு:

//


அண்ணே, சிங்கப்பூருக்கு ரெக்ரூட்மெண்ட் செய்யும் வேலையை என்னால் சரியாகச் செய்ய முடியாது :)

nellai அண்ணாச்சி சொன்னது…

அமைதியான இம்சை இல்லாத தேர்தல்

Anisha Yunus சொன்னது…

//இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.//

தமிழ் நாட்டிற்கு இதை விட பெருமை இப்பொதைக்கு இல்லைதான்!!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.//

ஆம். இது நல்லதொரு மாற்றத்தின் அறிகுறியாகவே தெரிகிறது. மகிழ்ச்சியடைவோம்.

Sivakumar சொன்னது…

//இனி இவர்களின் பருப்பு வேகாது என்பது மக்களின் பேச்சில் இருந்து தெரிகிறது//

இவங்க குடுக்கற ரேசன் கடை பருப்பு வெந்தா சரி.

Unknown சொன்னது…

உங்களோட கணிப்பு மெய்ப்பட வேண்டுகிறேன் தலைவரே!

சக்தி கல்வி மையம் சொன்னது…

பாராட்டுகள்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காங்கிரஸ்க்கு 4 டூ 8 சீட் தான் வரும் என்று நினைக்கிறேன்

பாட்டு ரசிகன் சொன்னது…

பார்ப்போம்..

தேர்தல் ஆணையத்தின் செயலால் வெற்றியின் உறுபாடு இன்னும் இழுப்பறியில்தான் இருக்கிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

Congress- 12????
Kandippa kidaikathu...

அருள் சொன்னது…

மே 13 அன்று உங்கள் பதிவை பார்க்க மிக ஆவலாக உள்ளேன். உங்கள் வார்த்தைகளை நிங்களே தின்பதையும், உங்களது பரிதாபகரமான விளக்கங்களையும் அன்றைக்கு பார்க்கலாம் தானே?

கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Unknown சொன்னது…

//கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

நல்லா சொன்னீங்க..

டோண்டு அவர்களிடம் சாதீய விவாதம் புரியும் நீங்க ஒரு சாதிக்கு ஆதரவாக பேசுவதும், விமர்சங்களை முன்வைக்கும்போது அதற்க்கு இது மாதிரி குதர்க்கமாக பதில் சொல்வதும், நீங்க பா.ம.க வுக்கு பதில் கழகங்களில் இருந்தால் சிறந்த எதிர்காலம் உண்டு...

rasikan சொன்னது…

//கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்//

கருணாநிதி அடுத்த அஞ்சு வருஷம் ஆட்சியில இருந்த உங்களோட சேர்த்து, மொத்த தமிழ் நாடே தூக்குல தொங்கணும், இல்லைனா அவனுங்களே தொங்க விற்றுவானுங்க !!!!!

//இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.//

தேர்தல் ஆணையத்தை பாராட்டுவதைவிட, அரசியல் குறுக்கீடுகள் எதுவும் இல்லை என்றால் எங்களால் நேர்மையாகப் பணி செய்ய முடியும் என்று புரிய வைத்த அரசு அலுவலர்களை பாராட்ட வேண்டும்.

ராஜரத்தினம் சொன்னது…

பாஸ், இந்த அருள் என்பவர் காண்டாமிருக முரட்டு தோல் கொண்டவர். இந்த பதிவுலகில் நான் ஆச்சர்யபடும் மனிதர். (எப்படி எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்க முடியுது!)உங்களின் எந்த விமர்சனத்திற்கும் லஜ்ஜையே இல்லாமல் பதில் சொல்லுவதில் வல்லவர். அவரிடம் வாதம் செய்யாமல் இருந்ததற்கு என் பாராட்டுகள்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அண்ணே நல்ல அலசல்...

தொங்கு சட்டமன்றம் தான் என்றாலும் அதிமுக நிச்சயம் அதிக இடங்களில் வெல்லம் என் எதிர்பார்ப்புப்படி அதிமுக 110 வரும்.

காங்கிரஸ் 8 வர வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறேன்...

பார்ப்போம் மே 13 அன்று...

Madhavan Srinivasagopalan சொன்னது…

முதல் பாரா -- ஆம்.. நல்லதொரு ஆரம்பம்.. தேர்தல் ஆணையத்தின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

//அங்கு மேல்மட்ட தலைவர்கள் வரைக்குமே மரியாதை கிடையாது. இப்படிப்பட்டவர்தான் தி.மு.க வுக்கு மாற்றாக நம் கண்முன் இருக்கிறாரர். //

உண்மை..

//ஆனால் ஆட்சியை மாற்றி கொடுத்தால்தான் ஆள்வோருக்கு கேரளா மாதிரி ஓரளவுக்காவது பயம் இருக்கும். //

என்ன செய்ய.. இதுவும் உண்மையன்றோ...!

///ஒரு ஹீரோ இந்த தேர்தலில் காமெடியனாகிப்போனார். //

ok

//காமெடியன் வடிவேலு ஹீரோவாகிப்போனார். //

ம்.. அவரு காமெடியனாத்தான் இருக்குறதா எனக்குப் படுது..
காலம் பதில் சொல்லும்..

//அவருக்குதான் நேர்மையாய் இருப்பது பிடிக்காதே. //

ROFL..

//கடைசி மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை விட்டு காங்கிரஸ் தன் இருப்பை காட்டிக்கொண்டதும்//

மிகப்பெரிய நகைச்சுவை.

//இனி வழக்கமான பதிவுகளை எழுதுவேன்.//

நல்ல முடிவு..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

பார்க்கலாம் தல....உங்கள் கணிப்பையும்

ரிஷி சொன்னது…

///விஜயகாந்த் என்கிற ஒரு ஹீரோ இந்த தேர்தலில் காமெடியனாகிப்போனார். காமெடியன் வடிவேலு ஹீரோவாகிப்போனார். உண்மையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம் மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கினை காட்டியது. கொஞ்சம் அருவருப்பாக பேசினாலும் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வடிவேலு சலிக்காமல் பிரச்சாரம் செய்தது அவர் இந்த அளவுக்கு வளர எடுத்துக்கொண்ட உழைப்பை பார்க்க முடிந்தது. ஒரு எளிய மனிதராக சினிமாவுக்குள் நுழைந்து தமிழ்நாட்டு அரசியல்வரை முன்னேறியிருக்கும் வடிவேலுக்கு எனது பாராட்டும்,வாழ்த்தும்..///

வடிவேலு தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ளவே இத்தேர்தலில் களமிறங்கினார். அவர் செய்ததற்குப் பெயர் பிரச்சாரமல்ல. தனிமனித தூற்றுதல்!! அவரே சொல்லியிருக்கிறார் தான் திமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்று. அவருக்குத்தெரியும் அவரது லிமிட் எதுவென்று. நிச்சயம் அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகமாட்டார். ஜெயாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதிலிருந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

வடிவேலுக்கு எனது பாராட்டும்,வாழ்த்தும்.. விஜயகாந்த்துக்கு இனி அரசியல் எதிர்காலம் இருக்காது.
//////////////////////////////////////////////
இதை நான் அப்படியே வளிமொழிகிறேன்........

Jey சொன்னது…

//கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்//

கலைஞர் மீண்டும் முதல்வரானா, நாமலே மரியாதையா தூக்குல தொங்கிடரது நல்லதுன்னுதா நினைக்கிறேன், ஏன்னா அப்படியும் அவங்களே வந்து அடிச்சி தொங்கப் போட்டாலும் போடுவானுக...

Jey சொன்னது…

மார்க்ஸிஸ்ட் 10 வரையிலும் ஜெயிப்பாங்கன்னு தோடுது, நீங்க 5 சொல்லிருக்கீங்க பாப்போம்...

ராஜ நடராஜன் சொன்னது…

//தலைவர்தான் சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார் என்றால் தொண்டர்களுமா? என வருத்தமாக இருக்கிறது. அண்ணாவால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் உணர்ச்சி மிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது.//

எனக்கு இணைய கண்மணிகளின் பாசத்தைப் பார்த்து மிக ஆச்சரியம்!எல்லா விதமான கருத்துக்களும் இங்கே முன்வைக்கப்படுகின்றன.நீ என்ன சொன்னாலும் நான் இப்படித்தான்யா என்ற மனநிலைக்காரர்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

இதுல கொடுமை என்னன்னா வடிவேலு பிரச்சாரத்தில் நாங்கள் வென்று விடுவோம் என்ற தி.மு.கவினரின் தன்னம்பிக்கைதான்:)

ராஜ நடராஜன் சொன்னது…

//ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு குறைவானவர் இல்லை.//

கருணாநிதியின் வலிமையே ஜெயலலிதாதான்:)

சசிகுமார் சொன்னது…

வைகோவை விரட்டாமல் இருந்திருந்தால் இன்னும் 20 சீட்டுக்கள் கூடுதலாக கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.

ராஜ நடராஜன் சொன்னது…

தேர்தல் ஆணையத்தின் உடன் இணைந்து செயல்படும் அனைவருக்கும்,அவர்களது உழைப்புக்கும் எனது பாராட்டுக்கள்.

sathyakumar சொன்னது…

இந்த தேர்தலில் இரண்டு மிக மிக நல்ல செய்தி :
1 தேர்தல் ஆணையம்
2 சீமான்
இருவருக்கும் என் மனபூர்வமான வாழ்த்துக்கள்!!

இந்த தேர்தலில் நடந்த காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்கு சீமானுக்காக கூடிய கூட்டம். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை காட்டுகிறது. வைகோ, விஜயகாந்த் தவற விட்ட மாற்று சக்தியாக அவர் இருப்பார். இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டில் சீமான் தன் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெல்லட்டும்...

Prakash சொன்னது…

Out of 236 seats, 70 are urban தொகுதி and 164 are கிராம தொகுதி.

ஒரு சிறு arithmatic கிராம செல்வாக்கு தொகுதியில் 70 சதம் DMK (164 * 70 % = 115 )
நகர செல்வாக்கு தொகுதிகளில் 30 சதம் DMK (70 * 30 % = 21 )
ஆக மொத்தம் 136 தொகுதி DMKக்கு கண்டிப்பாக உண்டு

அருள் சொன்னது…

ராஜரத்தினம் கூறியது...

// //இந்த அருள் என்பவர் காண்டாமிருக முரட்டு தோல் கொண்டவர். இந்த பதிவுலகில் நான் ஆச்சர்யபடும் மனிதர். // //

காலம்காலமாக இந்துத்வ, பார்ப்பன பயங்கரவாதக் கூட்டத்தை சகித்துக்கொண்டு வாழும் எங்களுக்கு காண்டாமிருக முரட்டுத்தோல் என்பது உண்மைதான். பார'தீய' சனதா கட்சி எனும் கொலைகார, கொடூர கூட்டத்தோடும் ஒரு காலத்தில் இணைந்திருக்க நேர்ந்தபோது முரட்டுத்தோல் இல்லாவிட்டால் பிழைத்திருக்க முடியுமா Mr. ராஜரத்தினம்

sathyakumar சொன்னது…

இந்த தேர்தலில் இரண்டு மிக மிக நல்ல செய்தி :
1 தேர்தல் ஆணையம்
2 சீமான்
இருவருக்கும் என் மனபூர்வமான வாழ்த்துக்கள்!!

இந்த தேர்தலில் நடந்த காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்கு சீமானுக்காக கூடிய கூட்டம். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை காட்டுகிறது. வைகோ, விஜயகாந்த் தவற விட்ட மாற்று சக்தியாக அவர் இருப்பார். இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டில் சீமான் தன் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெல்லட்டும்...

sathyakumar சொன்னது…

இந்த தேர்தலில் இரண்டு மிக மிக நல்ல செய்தி :
1 தேர்தல் ஆணையம்
2 சீமான்
இருவருக்கும் என் மனபூர்வமான வாழ்த்துக்கள்!!

இந்த தேர்தலில் நடந்த காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்கு சீமானுக்காக கூடிய கூட்டம். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை காட்டுகிறது. வைகோ, விஜயகாந்த் தவற விட்ட மாற்று சக்தியாக அவர் இருப்பார். இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டில் சீமான் தன் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெல்லட்டும்...

sathyakumar சொன்னது…

நானே மூன்று முறை வழிமொழிகிறேன் ......

இந்த தேர்தலில் இரண்டு மிக மிக நல்ல செய்தி :
1 தேர்தல் ஆணையம்
2 சீமான்
இருவருக்கும் என் மனபூர்வமான வாழ்த்துக்கள்


இந்த தேர்தலில் நடந்த காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்கு சீமானுக்காக கூடிய கூட்டம். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை காட்டுகிறது. வைகோ, விஜயகாந்த் தவற விட்ட மாற்று சக்தியாக அவர் இருப்பார். இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டில் சீமான் தன் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெல்லட்டும்...

Prakash சொன்னது…

From http://avetrivel.blogspot.com/2011/04/blog-post_12.html

by வெற்றிவேல் - Part 2

இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மதுரை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.. ஆனால் அழகிரியால்தான் மதுரையைச் சுற்றி சில தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு விமான நிலையமாக மதுரை மாற வேண்டுமென்றால் , தொடங்கியுள்ள பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிலையம், ஐ.டி பார்க் நன்கு செயல் பட வேண்டுமென்றால் நான் அழகிரியை ஆதரிக்கத் தான் செய்வேன்.மூடி இருந்த ஸ்பிக் மறுபடி இயங்க ஆரம்பித்துள்ளது அழகிரியால் தான்..

இணைய எழுத்தாளர்களின், ஊடகங்களின் திமுகவின் எதிர்மறைப் பிரச்சாரம் தங்கள் சிந்தனையை தடுமாற வைத்துள்ளது.இல்லை என்றால் சேது சமுத்திர திட்டம் நின்றதற்கு திமுகவை குறை கூறலாமா. ராமர் பாலம் என்று குறைகூறி அவர்கள் கும்பல் தானே நீதிமன்றம் படியேறி தடைவாங்கியவர்கள்.

மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளை வெட்டி எடுப்பவர் அதிமுக தலமைக்குத் தான் மிகவும் நெருக்கமானவர்

நியாயமான தமிழ் உணர்வைக்கூட ஏதோ தேசத்துரோகமாகப் பார்க்கும் சோ, ஜெ. கும்பலுக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள் வாக்கு கேட்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது தேர்தலுக்கு முன்னரே வைகோவை வெளியேற்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஜெ.வை எப்படி இவர்கள் ஆதரிக்கிறார்கள். போன ஜெ.ஆட்சியில் வைகோ.நெடுமாறன்,சுப.வீ போன்றவ்ர்களுக்கு நேர்ந்த்து தான் இவர்களுக்கும் என்பது கூடவா இவர்கள் அரசியல் அறிவுக்கு எட்டவில்லை.. பிரபாகரனை பிடித்து வந்து ஒப்படைக்க வேண்டும்,போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னவர் ஜெ. ஆரம்பத்தில் திமுக காங்கிரஸை கழட்டிவிட்த் தயாரான சமயம் , திமுகவிற்குப் பதிலாக காங்கிரஸ் கோட்டையில் நுழையத் தயாரானவர் தான் ஜெ. மற்றவர்,மிகுந்த ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டு சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸை பற்றி ஒரு கேள்வி கேட்காதவர் தான் கருப்பு எம்ஜிஆர் குடிகாரக் குப்பன் அண்ணன் விஜயகாந்த். இவர்களுக்கு தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு.. நான் எப்படி ஆதரிக்க முடியும்?

சுருக்கமாக ஒன்று

ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்

ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒரு புறம்
இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..

நின்று போன பெரம்பூர் மேம்பாலமே 5 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் திமுக ஆட்சி மறுபடி வந்து தான் அதனை முடித்தார்கள்.

இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக விற்கு வாக்களியுங்கள்

அருள் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது

// //டோண்டு அவர்களிடம் சாதீய விவாதம் புரியும் நீங்க ஒரு சாதிக்கு ஆதரவாக பேசுவதும், விமர்சங்களை முன்வைக்கும்போது அதற்க்கு இது மாதிரி குதர்க்கமாக பதில் சொல்வதும், நீங்க பா.ம.க வுக்கு பதில் கழகங்களில் இருந்தால் சிறந்த எதிர்காலம் உண்டு.// //

உங்கள் அளவுக்கு குதற்கமாக பதிவு போட முடியுமா? உங்கள் மனதில் வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறி கொப்பளிக்கிறது. எனக்கு எவர்மீதும் வெறுப்பு இல்லை.

1. "பா.ம.க என்றால் பாசக்கார மகன் கட்சி" என்றீர்கள். ஆனால், அந்த ஒரு கட்சி மட்டுமா அப்படி? என்கிற கேள்வியை கவனமாக தவிர்த்துவிட்டீர்கள். தி.மு.க - பாசக்கார மகன்கள் + மகள் கட்சி இல்லையா? காங்கிரசு பாசக்கார பேரன், மருமகள், கொள்ளுபேரப்பிள்ளைகள் கட்சி இல்லையா? அ.தி.மு.க ஒன்றுவிட்ட (சசிகலா) குடுப்பத்தின் கட்சி இல்லையா? விசயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே குடும்ப நிறுவனமாக தொடங்கப்படவில்லையா?

உணமை இப்படியிருக்க பா.ம.க மட்டும் தனியாக தெரிவது ஏன்? வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறிதான் காரணமா?

2.""பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?"" என்று ஒரு அண்டைப்புளுகை உங்கள் பதிவில் அள்ளிவிட்டீர்கள். அதன் பின்னூட்டத்தில் பலர் சாதிவெறியோடு சேறுபூசினார்கள். ஆனால், நான் அதே பின்னூட்டங்களில் உண்மையை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளேன்.

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_09.html

இருந்தும் உங்கள் தவறை திருத்த மறுப்பது ஏன்? வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறிதான் காரணமா?

Unknown சொன்னது…

//பார'தீய' சனதா கட்சி எனும் கொலைகார, கொடூர கூட்டத்தோடும் ஒரு காலத்தில் இணைந்திருக்க நேர்ந்தபோது முரட்டுத்தோல் இல்லாவிட்டால் பிழைத்திருக்க முடியுமா//

உம்மை யாருய்யா அவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு அவுங்க கூட எணைஞ்சிக்க சொன்னது

guna சொன்னது…

அதிமுக நிச்சயம் அதிக இடங்களில் வெல்லம் என் எதிர்பார்ப்புப்படி அதிமுக 118 வரும்.

srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அருள் சொன்னது…

@srinivasan

உங்கள் வார்த்தைகள் உங்களை அடையாளம் காட்டுகின்றன. முகமோ, முகவரியோ இல்லாத அனாதைக் கோழைகள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது அறிந்ததுதான்

ராஜேஷ், திருச்சி சொன்னது…

யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்

யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்

தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?

பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?

தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?

30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?

செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?

டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?

சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?

சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?

வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?

மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?

ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?

கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?

பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?

சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?

ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?

பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?

சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?

மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?

சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?

சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?

srinivasan சொன்னது…

Spectrum ஊழலை பற்றி ஒரு வார்த்தை பேசாத ஒரு மகனுக்காக கட்சி மாறும் கொள்கை இல்லாத மரவெட்டி ராமதாஸ் ஒழிக ..

அருள் சொன்னது…

முகமோ, முகவரியோ இல்லாத அனாதைக் கோழை Mr. srinivasan அவர்களே. பா.ம.க கொள்கை என்னவென்று இங்கே பார்த்து தெரிந்து கொள்க:

http://pmkmla.blogspot.com/2011/04/blog-post_06.html

மூர்த்தி சொன்னது…

‘இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.”

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் ஆணையம் மிருந்த விழிப்புடன் செயல்படுவது அரசியல் கட்சிகளின் முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும் பன்மடங்கு பெருகிவிட்டதையே பறைசாற்றுகிறது.

“உண்மையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம் மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கினை காட்டியது. கொஞ்சம் அருவருப்பாக பேசினாலும் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.”

வடிவேலுவுக்கு கூடிய கூட்டம் தி.மு.க. ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று தான சன் நியூஸ் செய்தியில் சொல்கிறார்கள்.

வடிவேலு அரசியலுக்கு வந்தால் வடீவேலுவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கலாம். ஆனால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?

“வடிவேலு சலிக்காமல் பிரச்சாரம் செய்தது அவர் இந்த அளவுக்கு வளர எடுத்துக்கொண்ட உழைப்பை பார்க்க முடிந்தது. ஒரு எளிய மனிதராக சினிமாவுக்குள் நுழைந்து தமிழ்நாட்டு அரசியல்வரை முன்னேறியிருக்கும் வடிவேலுக்கு எனது பாராட்டும்,வாழ்த்தும்..”

தன்னுடைய தனிப்பட்ட விரோதத்தை பழிதீர்த்துக்கொள்வதற்காகவே தேர்தல் களத்தில் அரசியல் மேடைகளில் திடீரென தோன்றி தமிழினத்துரோகிகளுக்கு வாக்கு கேட்கும் வடிவேலுவின் “அரசியல் முன்னேற்றத்தை” பாராட்டுவதும் வாழ்த்துவதும் சரிதானா?

மூர்த்தி

அருள் சொன்னது…

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

Prakash சொன்னது…

Pls read

http://princenrsama.blogspot.com/2011/04/blog-post_10.html

raja சொன்னது…

திரு அருள்.... ஒரு தலைவர்.....பெயர் ஞாபகம் இல்லை...அவர் சொன்னார் என் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் பதவிக்கு வந்தால் சாட்டை கொண்டு என்னை அடியுங்கள் என்றார்...> உங்களுக்கு அவரது பெயர் தெரியுமா....? நான் மறந்துவிட்டேன்...

sathyakumar சொன்னது…

உலக அளவில் தடை செய்யப்பட்ட வெப்பக் குண்டுகள், கிளஸ்டர் பாம்ஸ் என்றழைக்கப்படும் கொத்துக் குண்டுகள், ஆளை எரிக்கும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றைப் பொழிந்து ஈழத் தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தது, டெல்லியின் முழு ஆதரவு பெற்ற சிறிலங்காவின் முப்படைகள்.


மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த நேரம் அது. ஆனால் தாக்குதல் தொடர்ந்து கடுமையானது. ஏனென்று அப்போது தெரியவில்லை. பின்னாளில், “போரை வேகமாக நடத்தி முடிக்குமாறு இந்தியா அழுத்தம் தந்த காரணத்தினாலேயே கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன” என்று சிறிலங்க அரசுத் தரப்பு தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் எழுதின.


மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதி முடிந்து, 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டு, மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்பது உறுதியானவுடன், ஈழத்தில் தாக்குதல் மேலும் கடுமையானது. அடுத்த இரண்டு நாட்களில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவில் இருந்து ஆஸ்ட்ரேலியா வரை எல்லா பத்திரிக்கைகளும் எழுதின. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பெரும் கூக்குரல் எழுந்தது.


ஆனால் இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுபோல், தனது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சரவையில் பதவிகளைப் பெறுவதற்காக டெல்லிக்கு சென்று போராடிக்கொண்டிருந்தார். இதை தமிழினத்தின் வரலாற்றை எழுதுபவர்கள் நிச்சயம் குறிப்பிடுவார்கள்.


ஈழத் தமிழினம் கொன்று குவிக்கப்பட்ட அந்த‌த் தருணத்தில் டெல்லியில் பதவிக்காக போராடிக்கொண்டிருந்தவர் கருணாநிதி. ஒருவேளை அந்தப் போராட்டத்தைத்தான் இப்போது ‘இலங்கைத் தமிழர்களை அடகு வைத்து தனது பதவிப் போராட்டத்தை என்றைக்கும் தி.மு.க. நடத்தும்’ என்று கூறுகிறாரோ?

Unknown சொன்னது…

அதிமுகவிற்கு ஆதரவு என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது என்பது எனது கருத்து, அனைத்திலும் சுயேட்சைகளே வெல்ல வேண்டும் என்பதுதான் எனது விருப்பம், ஆனால் அது சத்தியமாக நடக்காது

wooddenhead சொன்னது…

சீமானுக்கு கூடிய கூட்டம்.....
நிச்சயமாக எங்களுக்கும் அவர் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்....

அவர் பின்னாள் அணிவகுத்து நிற்க தயாராக நிறையபேர் இருக்கிறோம்.

ராவணன் சொன்னது…

இது ஒரு தவறான கணிப்பு பாஸ்.

நம்ம எடத்துக்கு வந்து பாருங்க ...

தேர்தல் முடிவுகள் உள்ளன.

ராவணன் சொன்னது…

அருள் என்ற நபர், தலையில்லா முண்டம் ராமதாசு காலடியில் விழுந்து கிடக்க என்னவெல்லாம் பேசுது.

வன்னியர் என்றால் அன்புமணி மட்டுமல்ல என்பது இந்த அருள் முண்டத்திற்குப் புரியுமா?

மறத்தமிழன் சொன்னது…

செந்தில்,

அதிமுக ஆட்சியை பிடிக்கப் போகிறது என்பது பொதுவாக எல்லாரது கணிப்பாக இருக்கிறது.
ஏனென்றால் நம் மக்கள் அய்ந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை
விரும்புகிறவர்கள்.
பண மழை பொழியாவிட்டால் அதிமுக கூட்டனி 150 க்கும் அதிகமான இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.
ஜாதிக்கட்சிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்படும் என்பது எனது கருத்து.அதுதான் தமிழகத்திற்கும் நல்லது.
வடிவேலு பிரச்சாரம் திமுகவிற்கு மைனஸ்.
அறிஞர் அண்ணா,இ.வி.கெ.சம்பத்,கலைஞர் கருணாநிதி போன்ற திராவிட பாரம்பரியம் மிக்க பேச்சாளர்கள் வளர்த்த திமுக இன்று சிரிப்பு நடிகரையும், இளைய கற்புக்கரசியையும் நம்பி(!)
களத்தில் அதுவும் சரிபாதி தொகுதிகளில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.
காங்கிரசு ஒற்றை இலக்கம் பெற்றால் தமிழுணர்வாளர்கள் அனைவரும் மகிழ்வார்கள்...
அண்ணன் சீமானின் பின்னால் திரளும் இளைஞ‌ர்களைப் பார்க்கும்போது நிச்சயம் இன்னும் அய்ந்து ஆண்டுகளில் நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது...

kathir சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
kathir சொன்னது…

நல்ல அலசல் செந்தில்!

பரமத்தி வேலூரில் கொ.இ.பே வெல்லும் / பாமக தோற்கும்!

எனவே எண்ணிக்கையில் இரண்டு பக்கமும் இடம் மாறும்!

அந்தத் தொகுதியில்....
மூன்றாவது முறையாக போட்டியிடும் பாமக முதல் முறை மாற்றுசாதி வேட்பாளரையும் அடுத்த முறை வன்னியர் வேட்பாளரையும் (தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் என்பதால் வென்றார்) மூன்றாவது முறை உள்ளூரில் வேட்பாளர் கிடைக்காததால் திருப்பூரிலிருந்து மாற்று சாதி வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள்.

மே 13 பார்ப்போம்!!!

அருள் சொன்னது…

ராவணன் கூறியது...

// //அருள் என்ற நபர், தலையில்லா முண்டம் ராமதாசு காலடியில் விழுந்து கிடக்க என்னவெல்லாம் பேசுது.// //

ஆதிக்க சாதிவெறிப்பிடித்து போதையில் உளரும் திரு. ராவணன் அவர்களே.

"ஒரு நூறு பேர் இருப்பார்களா அந்த (வன்னியர்) சாதியில்?" என்று உங்கள் அரிப்பைத்தீர்க்க நீங்கள் எழுதி வைத்துள்ளீர்கள்.

1891 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலேயே வன்னியர்கள் எண்ணிக்கை 29,24,721. அதன் பிறகு 1971 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் குழு அறிக்கையின் படி 48,61,742.

இந்த புள்ளி விவரங்களை மக்கள் தொகை வளர்ச்சியுடன் கணக்கிட்டால் இப்போது வன்னியர்கள் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்தை எட்டும்.

இப்படியாக, தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூகமாக விளங்கும் வன்னியர்களை "ஒரு நூறு பேர் இருப்பார்களா" என்று எழுதும் நீங்கள் தலையில்லாத முண்டமா? அல்லது நானா?

kathir சொன்னது…

சீமானுக்கு கூடிய கூட்டம் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

அவர் கட்சியை எப்படி எடுத்துப்போகிறார் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!

Bala சொன்னது…

ஐந்தாண்டு திமுக ஆட்சி பற்றி ஏராளமாக முன்னரே எழுதியுள்ளோம்.
ஊழலில் சிகரம் தொட்டது மட்டுமல்ல, அது பற்றிய விமர்சனங்களை
ஜாதியைச்சொல்லி திசை திருப்ப பார்த்த ஆட்சி. ஒரு அமைச்சர்
சிறைக்கு சென்ற பிறகும், மனைவியையும் துணைவியின் மகளையும்
மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த பிறகும் முழுப் பூசணி அல்ல பூசணித் தோட்டத்தையே ஒரு கவளம் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.


தொலைக்காட்சி கொடுததால் குடும்பத்திற்கு வருமானம்,
காப்பீட்டுத் திட்டம் என்றால் குடும்பத்திற்கு வருமானம்,
அரிசி வழங்கினால் கடத்தல் மூலம் வருமானம்,
குடும்பத்தில் அனைவருக்கும் பதவி,
அதனால் அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு,
முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சினை என்றால்
முதலாளிகளுக்கு ஆதரவாக,
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் மோதல் என்றால்
ஆதிக்க சக்திகளின் பக்கமாகவே
ஆரவார முழக்கங்கள் அரைகுறையாக நின்று போனாலும் அதைப்
பற்றி சிறிதும் கவலை கொள்ளாத
அரசாக மட்டுமே திமுக அரசு இருந்தது. விமர்சனத்தை சகித்துக் கொள்ள இயலாத அரசு, சுய நலமா, மக்கள் நலமா என்றால் சுய நலம் மட்டுமே
மேலோங்கிய ஒரு அரசு.

இவர்கள் மீண்டும் வந்தால் இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக் கருதி இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள்.

http://ramaniecuvellore.blogspot.com/2011/04/blog-post_12.html

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இனி வழக்கமான பதிவுகளை எழுதுவேன்.////////

அப்பாடா........!

Rajasurian சொன்னது…

//கருணாநிதியின் வலிமையே ஜெயலலிதாதான்:) //

classic :)

srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சோம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சோம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சோம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சொம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சொம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சொம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சொம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சொம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சொம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?

srinivasan சொன்னது…

Arul said ..
////கலைஞர் மீண்டும் முதல்வரான பின்னர் தூக்குப் போட்டு தொங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

பா ம க மரம் வெட்டிகளின் சொம்பு தூக்கி இன்னும் தூக்கு மாட்டி தொங்க வில்லயா ?