6 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 20

நான் கம்பெனியை விட்டு பிரிந்தபின் என்னை சமாதானபடுத்தும் முயற்ச்சிகள் நடந்தன அப்போதும் கண்மணி என்னிடம் ரமேஷ் சொன்னதையே நம்பி சரிவர பேசவில்லை. அதன் அப்பாவித்தனத்தை எண்ணி இன்னும் நான் வருந்துகிறேன். ஏனென்றால் எனக்கும் ஒரு குற்ற உணர்ச்சி உண்டு, ரமேஷை கண்மணியிடம் நல்லவன் என அறிமுகப்படுத்திய குற்ற உணர்ச்சிதான் அது. என்றாவது ஒருநாள் உண்மை அறிந்து என்னிடம் பேசும் என இப்போதும் நம்புகிறேன்.

கம்பெனியை விட்டு பிரிந்தபின் இன்றுவரை எனக்கான பங்குத்தொகை வந்து சேரவில்லை, அதே சமயம் கம்பெனிக்காக நான் வாங்கிகொடுத்த கடன் தொகையை மட்டும் கேட்டேன். அதன் முதல் தவணையாக ஒரு இலட்ச்சம் செட்டில் செய்ய வந்த ரமேஷ் நடந்ததை எல்லாம் மறந்துவிடுங்கள் இப்போதும் நாம் ஒன்றாக இருக்கலாம் என்றார். நான் மறுத்துவிட்டு கம்பெனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிகொடுத்தேன். பணத்தை கொடுத்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்யபோகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் சிங்கபூர் சென்று ஐஸ்க்யுப் மெசின் வாங்கபோகிறேன் என்று சொன்னேன்.

அதனை வாங்கி சிங்கபூரில் நம் ஆபீஸில் வைத்துவிடுங்கள், நான் கொண்டுவந்து தருகிறேன் என்றார். நான் எதற்கு உங்களுக்கு வீண் சிரமம் என்றேன், இல்லை தம்பி நீங்கள் எனக்கு எனக்கு அதற்காக பணம் எதுவும் கொடுக்கவேண்டாம், உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்து கொள்ளலாம் என்றார், நானும் அவர் வலை விரிப்பதை அறியாமல் சரி அண்ணா சிங்கபூர் சென்றவுடன் உங்களுக்கு போன் செய்கிறேன் என்றேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் நான் வாங்கிய கடன் ரூபாய் நான்கரை இலட்சத்துடன் சிங்கபூர் வந்து மெசின் வாங்கிவிட்டு போன் செய்தேன். இந்த வேலையில் நண்பர் ஜமீல் எனக்காக தன் கால் வலியுடன் அலைந்து திரிந்ததை மறக்க முடியாது.

ரமேஷ் என்னிடம் நீங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள் நான் ஏற்றி அனுப்பசொல்கிறேன் என்றார், நானும் ஊருக்கு வந்துவிட்டேன் , வந்தபின் சிங்கபூரில் ஆகும் செலவு மற்றும் கப்பல் செலவை மட்டும் கொடுக்க முடியுமா என்று கேட்டார், நானும் சரியென்று மாப்பிள்ளை சார்லசிடம் சொல்லி கொடுக்க சொன்னேன், கண்டைனரும் நண்பர்களை விட்டு ஏற்றி அனுப்ப சொன்னேன்.

ஒரு வாரம் கழித்து கண்டைனர் சென்னை வந்து விட்டது டாக்ஸ் கட்ட வேண்டும் என முப்பதாயிரம் பணம் கேட்டார், பணம் குறைவாக உள்ளது என்று சொல்லி பதினைந்தாயிரம் மட்டும் கொடுத்தேன், அவ்வளவுதான் அதன்பிறகு இன்றைக்கு , நாளைக்கு, அடுத்தவாரம் என நாட்களை கடத்த ஆரம்பித்தார், இன்றுடன் ஒரு வருடம் நான்கு மாதங்கள் ஆகிறது இன்னும் பொருளை கொடுக்கவில்லை, நான் வங்கியில் வாங்கிய பணத்திற்கு மாதம் பதினேட்டயிரத்து ஐந்நூறு ரூபாய் பணம் கட்டிவருகிறேன்.

ரமேஷும் தன் போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டு சென்னையில்தான் எங்கோ இருக்கிறான். இதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் எனக்கு வேண்டிய சிலரே அவனுக்கு உதவுவதுதான்.

நான் எத்தனையோ பிரச்சினைகளை கடந்து வந்துவிட்டேன், அதைப்போல இதனையும் கடப்பேன், இப்போதும் என்னுடைய நல்ல நண்பர்களால் நான் நன்றாகவே இருக்கிறேன், ஆனால் ரமேஷ் தலைமறைவாக இருக்கிறான். இன்னும் எத்தனை நாளுக்கு அவனால் அதனை செய்ய முடியும், நான் மட்டும் அல்ல, ஒரு அப்பாவி மனிதன் ஒருவரிடம் வட்டி தருகிறேன் என்று சொல்லி மூன்று இலட்சம், சிங்கபூரில் ரவி என்பவருக்கு பத்தாயிரம் சிங்கபூர் வெள்ளி என அவன் ஏமாற்றியவர்களின் பட்டியல் நீளுகிறது, இது இப்போதைய நிலைதான் இதற்க்கு முன் உள்ள விசயங்கள் நிறைய,.

எனக்கு உண்மையிலேயே உள்ள வருத்தம் என்னவென்றால் , ஒரு அப்பாவி பெண் கண்மணியை அவன் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

கருத்துகள் இல்லை: